எடை குறைப்பு நிலையம் ரூ 1.25 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

திருநெல்வேலி:முழு பயிற்சிக்கும் செல்லாத பெண்ணுக்கு எடை குறைப்பு மையம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.

திருநெல்வேலியை சேர்ந்த மைக்கேல் சேவியர் ஹட்ரிக் மனைவி ரெஜி டிம்னா 38. இவர்

திருநெல்வேலி புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கலர்ஸ் உடல் எடை குறைப்பு மையத்தில் இயந்திர மசாஜ் மூலம் உடல் எடை குறைக்கும் பயிற்சியில் சேர்ந்தார்.

நாள் ஒன்றுக்கு அரை கிலோ எடையை குறைக்கலாம் என்றும், 60 நாட்களில் 30 கிலோ எடையை குறைக்க ரூ.90 ஆயிரம் கட்டணமாக பெற்றனர்.

ரெஜி டிம்னா, 7 நாட்கள் இயந்திர மசாஜ் பெற்றார். அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. சிகிச்சையளித்த டாக்டர் இயந்திர மசாஜ் செய்யக் கூடாது என அறிவுறுத்தினார்.

மொத்தம் 7 நாட்களே பயிற்சி மேற்கொண்ட அவர், கட்டணமாக செலுத்திய தொகையை திரும்ப கேட்டார். ஆனால் மையம் தர மறுத்தது.

வழக்கறிஞர் பிரம்மா மூலம், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் கிளாடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி, ரூ.90 ஆயிரம் கட்டண தொகையை திரும்ப கொடுக்கவும், ரூ.25,000 இழப்பீட்டு தொகை மற்றும் ரூ.10,000 வழக்குச் செலவாக மொத்தமாக ரூ.1,25,000 வழங்க உத்தரவிட்டனர்.

Advertisement