பொன்முடியை கண்டித்து இந்து புரட்சி முன்னணி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து இந்து புரட்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அமைச்சர் பொன்முடி கடந்த 6ம் தேதி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் திருநீறு, திருமண் குறித்து அவதுாறாக பேசினார். அவ்ர மீது சட்ட நடவடிக்கை எடுக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடியின் கொச்சைப் பேச்சை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு இந்து புரட்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜோதி குமரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement