கோயில் சிலை உடைப்பு: பூஜாரிகள் 5 பேர் கைது

வத்திராயிருப்பு:
அண்ணன், தங்கை பாசத்திற்கு உதாரணமாக போற்றப்படும் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோயிலில் ஜனவரி 25 இரவு கோயில் மண்டபத்தில் கம்பிகள் வளைக்கப்பட்டும், கருவறையில் இருந்த அம்மன் சிலை உடைக்கப்பட்டும் கிடந்தது. டி.எஸ்.பி., ராஜா மற்றும் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில் சிலைகளை உடைத்ததாக கோயில் பூஜாரிகளான சுந்தர மகாலிங்கம் 68, கனகராஜ் 32, பரமேஸ்வரன் 50, கருப்பசாமி 21, சுந்தரபாண்டி 23 ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

Advertisement