காரியாபட்டியில் சாவியான கோடைகால நெற்பயிர்கள்

காரியாபட்டி::
காரியாபட்டி முடுக்கன்குளம் பகுதியில் கோடை காலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சரிவர விளைச்சல் இல்லாமல் சாவியாகி போனதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். நிவாரணம் வேண்டி வலியுறுத்தியதால் வேளாண் அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருகின்றனர்.

காரியாபட்டி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சென்ற ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால்நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. விவசாயிகள்அதிக அளவில் நெல் பயிரிட்டனர். நன்கு வளர்ந்து ஓரளவிற்கு விளைச்சல் ஏற்பட்டது.

சில இடங்களில் நோய் தாக்குதலால் விளைச்சல் சரிவர இல்லை. இதைத் தொடர்ந்து, ஆங்காங்கே உள்ள கண்மாய்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருப்பு இருந்தது. இதனை பயன்படுத்தி காரியாபட்டி முடுக்கன்குளம் பகுதி விவசாயிகள்பலர் கோடைகால பயிராக நெல் பயிரிட்டனர்.

நன்கு வளர்ந்து பால் பிடிக்கும் சமயத்தில் மழை இல்லாதது, நோய் தாக்குதலுக்கு உள்ளாகின. மருந்துகள் தெளித்தும் பயனில்லை. பெரும்பாலான விவசாயிகளுக்கு சரிவர விளைச்சல் இல்லாமல் நெற்பயிர்கள் சாவியாகி போனது.

பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் வேளாண் அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement