வேலுடையான்பட்டு கோவிலில் பங்குனி உத்திரம் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

நெய்வேலி : வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த பங்குனி உத்திர விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய உற்சவமான காவடி திருவிழா நேற்று நடந்தது.
நெய்வேலி மட்டுமின்றி சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயில் காவடி, பால் காவடி எடுத்தும், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 18ல் உள்ள காவடி விநாயகர் கோவில் இருந்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, மின்துறை இயக்குநர் வெங்கடாசலம் ஆகியோர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி மனைவி ராதிகா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மத்திய தொழில்நுட்ப அலுவலகம், மக்கள் தொடர்பு அலுவலகம், சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களின் சார்பில் பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. என்.எல்.சி., சார்பில் பக்தர்களுக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார், என்.எல்.சி.,பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று 12ம் தேதி இரவு தெப்பக்குளத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வாணையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை 13ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
மேலும்
-
அமெரிக்க விசா ரத்து நடவடிக்கையில் 50 சதவீதம் இந்திய மாணவர்கள்
-
வீட்டில் கஞ்சா செடி : மத்திய அரசு அதிகாரி கைது
-
பழநி கிரிவீதியில் கண்காணிப்பு குழு ஆய்வு
-
பைக்கில் வந்து நகை பறித்த லாரி உரிமையாளர் கைது
-
கார்--லாரி மோதல்: 3 பேர் பலி
-
ரஷ்யா - -உக்ரைன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு