மழலையர் பள்ளி ஆண்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் முகமது யூசுப் மழலையர் தொடக்கப் பள்ளியின் 17வது ஆண்டு விழா முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் நூருல் கரீம் வரவேற்றார். முதல்வர் ஜீரைதா பர்வீன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் லாவண்யா, ஜன்னத் நிஷா கலந்து கொண்டனர்.

Advertisement