மஞ்சள்நீர் கால்வாய் ஓரம் கழிவுநீர் பள்ளம் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இக்கால்வாயின் தடுப்புச்சுவர் சேதமடைந்து இருந்ததால், 40 கோடி ரூபாய் செலவில், புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முன்பு இருந்த பழைய கால்வாயின் அகலத்தைவிட தற்போது புதிதாக கட்டப்படும் கால்வாயின் அகலம் குறைவாக கட்டப்பட்டுள்ளதால், சாலைக்கும் தடுப்புச்சுவருக்கும் இடையே இடைவெளியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில், மாநகராட்சி சார்பில், மண் நிரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்நகர், திருக்காலிமேடு பிரதான சாலை வழியாக செல்லும் மஞ்சள்நீர் கால்வாய் அருகில் வசிப்பவர்கள், கால்வாய்க்கும், சாலைக்கும் இடையே காலியாக உள்ள இடத்தில் பள்ளம் தோண்டி வீட்டு உபயோக கழிவுநீரை பள்ளத்தில் விடுகின்றனர்.
சாலையோரம் உள்ள ஆழமான பள்ளத்தில் அவ்வழியாக செல்லும் ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் தவறி விழுந்து கழிவுநீரில் மூழ்கி உயிரிழக்கும் சூழல் உள்ளது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, கால்வாய்யோரம் கழிவுநீர் விடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவும், சாலைக்கும், கால்வாய்க்கும் இடையே மண் கொட்டப்பட்டுள்ள இடத்தை சமன் செய்து, சாலையை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு