புத்தகரம் குளம் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இக்கிராமத்தில், அன்னமார் கோவில் அருகே கிராமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பிலான பொதுக்குளம் உள்ளது.
இக்குளம் ராவணன் குளம் என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதிக்கான குடிநீர் ஆதாரமாக இக்குளம் இருந்தது.
மாற்று குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்ட பின், அப்பகுதிக்கான நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இக்குளம், பல ஆண்டுகளாக துார்வாரtமல் அவ்வப்போது குளத்தின் கரை பகுதி பலப்படுத்துதல் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால், குளம் துார்ந்து மழைக்காலங்களில் போதுமான நீர் சேகரமாகாத நிலை உள்ளது. மேலும், குளத்திற்கான வரத்து கால்வாய்களும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
எனவே, இந்த குளத்தை துார்வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
Advertisement
Advertisement