சாலையோர தீயால் வாகன ஓட்டிகள் சிரமம்

கூடலுார் : கூடலுார் நெடுஞ்சாலை ஓரத்தில் தீ வைத்து விடுவதால் வெளியேறும் புகை வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரங்களில் காய்ந்த இலை சருகுகள், குப்பை உள்ளிட்டவைகளை தீ வைத்து விடுகின்றனர்.
இதிலிருந்து வெளியேறும் புகை நெடுஞ்சாலையில் பரவுகிறது. எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத வகையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் பகலில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் தீ வைப்பதால் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகமாக உள்ளது.
மேலும் கடந்து செல்லும் வாகனங்களில் தீ பரவும் அபாயமும் உள்ளது. அதனால் நெடுஞ்சாலை ஓரத்தில் தீ வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement