கோழித் தீவனத்துக்கான மக்காச்சோள ரகம் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் திட்டம்

கோவை:கோழித் தீவனத்துக்கு உகந்தவகையில், 'லோ பைட்டேட்' மக்காச்சோள ரகங்களை உருவாக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என, கோவை, வேளாண் பல்கலை தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவிகேசவன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
மற்ற பயிர்களோடு ஒப்பிடுகையில், மக்காச்சோளம் விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்தும் இயந்திர மயம் என்பதால், கூலி குறைவு.
அதிக பராமரிப்பு, அதிக நீர் தேவையில்லை. கால்நடைத் தீவனம், எத்தனால் உற்பத்தி போன்றவற்றுக்காக, மக்காச்சோளத்தின் தேவை அதிகம் இருப்பதால், நிலையான விலைக்கு உத்தரவாதம் இருக்கிறது. எனவே, இது, லாபகரமான விவசாயம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய மக்காச்சோள ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எம்.ஆர்.,) சார்பில், கோவை வேளாண் பல்கலையில் மூன்று நாள் மக்காச்சோள பயிலரங்கு நடந்தது.
இதில், மக்காச்சோளத்தில் நடந்து வரும் தற்போதைய ஆய்வுகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கோழித் தீவனம் மற்றும் ஊட்டச்சத்துக்கு உகந்த, க்யூ.பி.எம்., எனப்படும் தரமான புரோட்டின் நிறைந்த மக்காச்சோளத்தை உருவாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இதன்படி, அத்தியாவசிய அமினோ அமிலங்களான லைசின், டிரிப்டோபான் ஆகியவற்றை அதிகம் கொண்ட ரகங்கள் உருவாக்கப்படும்.
இது, மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவாக அமையும். விட்டமின் ஏ அதிகம் கொண்ட மக்காச்சோளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோழித் தீவனத்துக்கு, அடர் ஆரஞ்சு நிற மக்காச்சோளம்தான் தேவைப்படும். அப்லோடாக்சின் என்ற பூஞ்சை எதிர்ப்புத் திறன் கொண்ட, ரகங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கோழித் தீவனத்தில் பைட்டிக் அமிலம் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான், இரும்பு, ஜிங்க் உள்ளிட்ட இதர சத்துகள் எளிதில் கிரகிக்கப்படும்.
எனவே, 'லோ பைட்டேட்' கொண்ட மக்காச்சோள ரகங்களை உருவாக்கவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது