உறிஞ்சு குழிகளை விரைவாக முடிக்க மக்கள் வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி::--
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், கவுண்டம்பட்டி காளிபுரம், கன்னடதாதம்பட்டி, தோளனுார், கவுண்டம்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், 7 மின் விசை பம்புகளும், 14 ஆழ்துளை கிணறுகளும் உள்ளன. பம்புகள் மற்றும் ஆழ்துளை கிணறு பகுதிகளில் வீணாகும் தண்ணீர் தெருக்கள், வீடுகள் முன் தேங்குவதால் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதை தடுக்க, ஆழ்துளை கிணறு உள்ள பகுதிகளில் உறிஞ்சி குழிகள் அமைத்து, கழிவு நீரை வடிகட்டி பூமிக்கு விடப்படுகிறது. நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, உறிஞ்சி குழிகள் அமைக்கப்படுகின்றன.
அதன்படி கவுண்டம்பட்டி மெயின் ரோடு மற்றும் தோளனுார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், ஆழ்துளை கிணறுகள், மின்விசை பம்புகள் அருகில் உறிஞ்சி குழிகள் அமைக்க குழி தோண்டப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் முழுமையாக கட்டப்படவில்லை. சாலையோரம் குழிகள் தோண்டப்பட்டு உள்ளதால், அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள், உறிஞ்சி குழிகளில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
ஆகவே, விபத்து ஏற்படாத வகையில், உறிஞ்சி குழிகளை விரைவாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது