தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு சிறப்பு

கோவை: அவிநாசி சாலையிலுள்ள, தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா, நேற்று மகளிர் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடுகளுடன், கோலாகலமாக நடந்தது.
தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 14 அன்று துவங்கியது. 15ல் கொடியேற்றமும் பூச்சாட்டும் நடந்தது. நேற்று முன்தினம் அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, 108 மகளிர் பங்கேற்ற, திருவிளக்கு வழிபாடு நடந்தது.
கோவில் மண்டபத்தில், 108 மகளிர் வரிசையாக அமர்ந்து, குத்துவிளக்குளை எழுந்தருளுவித்து, குத்துவிளக்குகளுக்கு மங்கல பொருட்களை சமர்ப்பித்து, 108 சக்தி மந்திரங்களை போற்றி, துதித்து குங்குமார்ச்சனை செய்து வழிபட்டனர். பங்கேற்ற அனைவருக்கும், கோவில் சார்பில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. திரளானோர் தண்டுமாரியம்மனை வழிபட்டனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது