இயற்கையை பாதுகாப்பது நம் கடமை மாவட்ட நீதிபதி விஜயா பேச்சு

கோவை: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோவை மாநகராட்சி சார்பில், பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ், 1,000 மரக்கன்று நடும் விழா மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம், காளப்பட்டி, கொங்கு நகரில் நேற்று நடந்தது.
இதில், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா, மரம் நடும் விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:
இயற்கையை நாம் தவறாக பயன்படுத்தி வருவதால், அழிவிலிருந்து பாதுகாக்க, அனைவரும் மரம் நட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சுற்றுப்புற சூழல் நிதி திரட்டப்படுகிறது. அத்தொகையை கொண்டு மரம் நடுவதற்கு செலவிடப்படுகிறது. காற்று, நீர், ஒலி மாசுபடுவதை தடுக்க, கட்டாயம் மரம் வளர்க்க வேண்டும்.
அரளிசெடி, வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையை உள்வாங்கி, சுத்தமான காற்றை நமக்கு தருகிறது. அதனால், சாலையோரங்களில் அரளிச்செடி வளர்க்கப்படுகிறது.
இயற்கையை பாதுகாப்பது நம் கடமை. அரசியலமைப்பு சட்டத்திலும் இயற்கையை பாதுகாப்பதன் கடமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மரம் நடுவதோடு விட்டு விடாமல், அவற்றை வளர்த்து பாதுகாக்கவும் வேண்டும்.
கோவை மாவட்ட நீதித்துறைக்கு, வனத்துறையால் வழங்கப்பட்ட, 1,000 செடிகளை வளர்த்து வருகிறோம். அந்த செடி எட்டு அடி, உயரம் வளர்ந்த பிறகு பல்வேறு இடங்களில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சாலை அகலப்படுத்த, வேறு வழியின்றி மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால், வெட்டிய மரங்களுக்கு பதிலாக, இரண்டு மடங்கு செடிகள் நடவேண்டும்.
இவ்வாறு, நீதிபதி விஜயா பேசினார்.
கோவை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மாவட்ட வனஅலுவலர், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி நாராயணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் பேசினர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது