470 ஏக்கரில் 3 லட்சம் மரங்கள்; உலகின் மிகப்பெரிய மியாவாக்கி காடு; குஜராத்தில் ஒரு ஆச்சர்ய சாதனை!

புதுடில்லி: குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், 470 ஏக்கரில் 3 லட்சம் மரங்களுடன் உலகின் மிகப்பெரிய மியாவாக்கி காட்டை உருவாக்கிய டாக்டர் நாயருக்கு மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
மியாவாக்கி மரம் வளா்ப்பு முறை என்பது ஜப்பானைச் சோ்ந்த யோகோஹாமா பல்கலை தாவரவியலாளா் அகிரா மியாவாக்கி கண்டுபிடித்த முறையாகும். அதனால், இவரது பெயரில் அவரது மரம் வளர்ப்பு முறைக்கு 'மியாவாக்கி' என்று பெயிரிடப்பட்டுள்ளது. இந்த முறையில் ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறைக்கு 'மியாவாக்கி' என்று பெயர்.
உலகம் முழுவதும் மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த காடுகள் விரைவான வளர்ச்சி தரும். அதாவது 3லிருந்து 5 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துவிடும். உயிரியல் பன்முகத்தன்மையை ஆதரிக்கும், நகர வெப்பத்தை குறைக்கும் மற்றும் காற்றின் தரத்தை மேம்படுத்தும்.தற்போது இந்தியாவிலும் மியாவாக்கி முறை பிரபலமாகி வருகிறது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் டாக்டர் நாயர் உருவாக்கிய மியாவாக்கி வனப்பகுதி, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வனத்தின் வீடியோவை பகிர்ந்த அவர், மனதார பாராட்டு தெரிவித்துள்ளார்.
யார் இந்த டாக்டர் நாயர்?
என்விரோ கிரியேட்டர்ஸ் என்ற அறக்கட்டளையை கடந்த 2014ல் டாக்டர் நாயர் நிறுவினார்.
அதன் மூலம் 100க்கும் மேற்பட்ட மியாவாக்கி காடுகளை உருவாக்கி உள்ளார்.இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மியாவாக்கி காடுகள், குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 470 ஏக்கரில் 3 லட்சம் இயற்கை மரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் டாக்டர் நாயர், 2030க்குள் இந்தியாவில் 100 கோடி இயற்கை மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டாக்டர் நாயரால் உருவாக்கப்பட்ட மியாவாக்கி காடுகள் வீடியோவை பகிர்ந்து, பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: இந்த சாதனை, சுற்றுச்சூழல் மீட்பு மற்றும் நிலையான நகர்ப்புற மேம்பாட்டில் ஒரு முன்னணி நாடாக உயர்வதை எடுத்துக்காட்டுகிறது. வெளிப்புற சான்றுகள் தேவையில்லாமல், இந்தியா சுற்றுச்சூழல் புதுமைகளில் உலகின் முன்னணி நாடாக உள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
மியாவாகி காடு என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால் டாக்டர் நாயர் பற்றியோ, அவர் இந்தியாவில் உலகின் மிகப்பெரிய காட்டை எவ்வாறு உருவாக்கினார் என்பது பற்றியோ எதுவும் தெரியாது.
அமெரிக்கா நிலைத்தன்மையை அதன் முன்னுரிமை பட்டியலில் இருந்து நீக்கியுள்ள நேரத்தில், நம்மிடையே இருக்கும் இதுபோன்ற நாயகர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



மேலும்
-
ஏப்.24ல் நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
-
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா முதல்வர்
-
நெருங்கிய உறவினர் இறுதி சடங்கில் விசாரணை கைதிகள் பங்கேற்க அனுமதி
-
பாட்டி சொத்தை விற்க உடன் பிறந்தோர் சம்மத பத்திரம் தேவையா?
-
தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு சிறப்பு
-
கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை 25ம் ஆண்டு சிறப்பு