பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா முதல்வர்
மதுரை: தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களை, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சட்டசபையிலும் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. தொடர் போராட்டங்கள் நடந்தன. பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கும் மறு வாழ்வு கிடைக்கும்.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: பணியில் சேர்ந்த 2012 முதல் கோடை விடுமுறையின்போது சம்பளமின்றியும், அரசு சலுகைகள் இன்றியும் பணியாற்றுகிறோம். காலமுறை சம்பளம் பெற்றால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும்.
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் ரூ.12 ஆயிரத்து 500 தொகுப்பூதியம் வழங்க ஆண்டுக்கு ரூ.160 கோடி செலவாகிறது.
இதையே காலமுறை சம்பளமாக வழங்க ரூ.300 கோடி தேவைப்படும். அதனை இந்தாண்டு பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கிய ரூ.46 ஆயிரத்து 767 கோடியில் இருந்து செலவிட வேண்டும். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடப்பதை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அறிவித்து, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது