மோகன் பகான் அணி சாம்பியன் * பெங்களூருவை வீழ்த்தியது

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் மோகன் பகான் அணி சாம்பியன் ஆனது. நேற்று நடந்த பைனலில் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 11வது சீசன் நடந்தது. மொத்தம் 13 அணிகள் பங்கேற்றன. சென்னை அணி 24 போட்டியில் 7 வெற்றி (6 'டிரா', 11 தோல்வி) மட்டும் பெற்று, 11 வது இடம் (27 புள்ளி) பிடித்து வெளியேறியது. கோவா, ஜாம்ஷெட்பூர் அணிகள் அரையிறுதியுடன் திரும்பின.
நேற்று கோல்கட்டாவில் நடந்த அரையிறுதியில் சுனில் செத்ரியின் பெங்களூரு, மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்த, முதல் பாதி கோல் எதுவுமின்றி சமனில் (0-0) முடிந்தது.
இரண்டாவது பாதியில் போட்டியின் 49 வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் வில்லியம்ஸ், பந்தை மோகன் பகான் கோல் ஏரியாவுக்குள் தள்ளினார். அப்போது அங்கிருந்த மோகன் பகான் வீரர் ஆல்பர்ட்டோ ரோட்ரிக்ஸ், பந்தை இடது காலால் அடித்து வெளியே தள்ளி விட முயன்றார். துரதிருஷ்டவசமாக பந்து கோல் போஸ்ட் வலது 'கார்னர்' பகுதிக்குள் செல்ல, 'சேம் சைடு' கோலாக மாறியது. மோகன் பகான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெங்களூரு அணி 1-0 என முன்னிலை பெற்றது.
72வது நிமிடம் மோகன் பகான் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை, இடது காலால் அடித்து, கம்மிங்ஸ் கோலாக மாற்ற, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. 79 வது நிமிடம் சுனில் செத்ரி கொடுத்த பந்தை பெற்ற வில்லியம்ஸ், அடித்த பந்து கோல் போஸ்ட் மேலாகச் சென்றது. முடிவில் போட்டி சமன் ஆனது.
இதையடுத்து போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. 96 வது நிமிடம் மோகன் பகான் வீரர் மெக்லாரென் ஒரு கோல் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. முடிவில் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.
மேலும்
-
பெங்களூரு மாநகராட்சி முதன் முறையாக ரூ.4,927 கோடி சொத்து வரி வசூல்
-
மனைவியின் குழந்தையை கொன்ற வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் சிறை
-
கல்லுாரி விரிவுரையாளர்கள் முகமூடி அணிந்து போராட்டம்
-
காற்றில் பறந்த ராகுலின் தேர்தல் வாக்குறுதி; பல்லாரியில் 40 ஜீன்ஸ் தொழிற்சாலைகள் மூடல்
-
ஜோகிமட்டி மலையில் தடை
-
தாத்தாவை தாக்கிய பேரன் கைது