பா.ம.க.,வை நானே வழி நடத்துவேன்; அன்புமணி பரபர அறிக்கை

5

சென்னை: ராமதாசுக்கு புகழ் சேர்க்கும் விதமாக, பா.ம.க.,வை தொடர்ந்து நானே வழி நடத்துவேன் என்றும், பா.ம.க., தலைவரை பொதுக்குழு உறுப்பினர்கள் கூடியே தேர்ந்தெடுக்க முடியும் என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


@1brதேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் முரண்பட்டதால், கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, பனிப்போர் நீடித்து வந்தது.


இதனிடையே, அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார்.இது பா.ம.க.,வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராமதாஸ் மகள்கள் ஸ்ரீ காந்தி, கவிதா குடும்பத்தினரும் ராமதாஸை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில், ராமதாசுக்கு புகழ் சேர்க்கும் விதமாக, பா.ம.க.,வை தொடர்ந்து நானே வழி நடத்துவேன் என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்;1989 தொடங்கப்பட்ட பாமகவின் கட்சியின் கொள்கை விதிப்படி பா.ம.க., தலைவரை பொதுக்குழு உறுப்பினர்கள் கூடியே தேர்ந்தெடுக்க முடியும். 2022 நான் தலைவரானதும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்ததன் மூலமே, அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பா.ம.க.,வின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.

எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பா.ம.க.,வை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement