மும்பையில் டேபிள் டென்னிஸ் ஏலம்

மும்பை: 'அல்டிமேட் டேபிள் டென்னிஸ்' தொடருக்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் மும்பையில் (ஏப். 15) நடக்க உள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'அல்டிமேட் டேபிள் டென்னிஸ்' (யு.டி.டி.,) தொடர் நடத்தப்படுகிறது. இதன் 6வது சீசன் (மே 29 - ஜூன் 15) ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடருக்கான வீரர், வீராங்கனைகள் வரும் ஏப். 15ல் மும்பையில் நடக்கிறது. மொத்தம் 56 பேர் ஏலத்தில் வரவுள்ளனர். ஒவ்வொரு அணிக்கு ரூ. 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை தொகை என 4 பிரிவுகளாக (ரூ. 11, 7, 4, 2 லட்சம்) பிரிக்கப்பட்டுள்ளன.
தியா, யாஷஸ்வினி, பயாஸ் ஜெயின் உள்ளிட்ட இளம் இந்திய நட்சத்திரங்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். ஹர்மீத் தேசாய், மணிகா பத்ரா, சத்யன் ஞானசேகரன், சுதிர்தா முகர்ஜி, ஸ்ரீஜா அகுலா போன்ற சீனியர் இந்திய நட்சத்திரங்களும் ஏலத்தில் வரவுள்ளனர். சீனா, ருமேனியா, நைஜீரியா, ஸ்பெயின் நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்ய கடுமையான போட்டி நிலவலாம்.
மேலும்
-
நிபுணர் குழுக்கள் ஒப்புதல் இன்றி ஈரோடு கோவில் சீரமைப்பு பணி கூடாது ஐகோர்ட் திட்டவட்டம்
-
நெல்லையப்பர் கோவில் நிலத்தில் வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு ஐகோர்ட்டில் வழக்கு
-
தொடர் முற்றுகை போராட்டம் மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு
-
ரூ.65 லட்சம் நில மோசடி அ.தி.மு.க., பிரமுகர் சிக்கினார்
-
பொன்முடி அறிக்கை
-
பள்ளி கல்வி துறைக்கு சாதனையாளர் விருது