கடைசி ஓவரில் சிக்சர் மழை; ஐதராபாத்துக்கு 246 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. ஐதராபாத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

13 பந்துகளில் 36 ரன்களை விளாசிய இளம் வீரர் பிரியன்ஷ் ஆர்யா ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டானார். தொடர்ந்து, பிரப்சிம்ரன் சிங்குடன் இணைந்து ஸ்ரேயாஷ் ஐயர் ரன் குவித்தார். இதனால், பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய , பிரப்சிம்ரன் சிங் 23 பந்துகளில் 42 குவித்து எஷன் மலிங்கா பந்தில் அவுட்டாகினர்.

தொடர்ந்து, அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஷ் ஐயர் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது அவரது அதிவேக அரைசதமாகும். அவர் 82 ரன்களில் அவுட்டானார்.

ஷமி வீசிய கடைசி ஓவரை ஸ்டொயினிஸ் எதிர்கொண்டார். கடைசி 4 பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். இதனால், பஞ்சாப் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களை சேர்த்தது. ஸ்டொயினிஸ் 11 பந்துகளில் 34 ரன் குவித்தார்.

அதேவேளையில், 4 ஓவர்களை வீசிய ஷமி விக்கெட் ஏதுமின்றி 75 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது ஒட்டுமொத்த பிரீமியர் லீக் வரலாற்றில் 2வது மோசமான பவுலிங் ஆகும்.

Advertisement