டூ - வீலர்கள் திருடிய சிறுவன் பிடிபட்டான் 10 ஸ்கூட்டர்கள் மீட்பு

சென்னை:பெரியமேடு, ஸ்டிங்கர்ஸ் தெருவைச் சேர்ந்தவர் மெர்லின், 25. கடந்த 8ம் தேதி இரவு, வீட்டின் அருகே அவரது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை இருசக்கர வாகனம் திருடுபோனது.

இது குறித்து வேப்பேரி போலீசார் விசாரித்தனர். இதில், வேப்பேரியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். அவரிடமிருந்து, 10 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சிறுவன், கூட்டாளியுடன் சேர்ந்து சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் கள்ளச்சாவியால், இருசக்கர வாகனங்களை திருடி வந்துள்ளான். மேலும், போலி ஆவணங்கள் தயாரித்து, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது. தலைமறைவான சிறுவனின் கூட்டாளியை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement