ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யணும்: ஜீயர் சுவாமிகள்

18


கோவை: ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோவை சிவாஞ்சலி அமைப்பு சார்பில் நடைபெற்ற ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் பேட்டி அளித்தார்.



இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தைரியமுள்ள ஹிந்துக்கள் அந்த அமைச்சரை எங்கும் விடாதீர்கள்.
கொலை செய்துவிட்டு மன்னிப்பு என கேட்டால் விடுவார்களா? தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் விடுவார்களா? பெண்களிடம் ஓசி ஓசி என்று சொன்னவர். ஒரு வெட்கக்கேடான அமைச்சர் பொன்முடி. இவர் அமைச்சராக இருக்கிறார் ஹிந்து தர்மத்தை கேவலமாக பேசுகிறவர்.



ஹிந்து தர்மத்தை அவமதித்து அமைச்சர்களாக உள்ளனர். சனாதானத்தை ஒழிக்கிறேன் என்கிறார் உதயநிதி. ஆனால் அவரது அம்மா கோவில் கோவிலாக பிரார்த்தனை செய்கிறார். மசூதி முன்பு நின்று கொண்டு மசூதி இல்லை என்று கூற உங்களுக்கு கூற தைரியம் இருக்கிறதா?
இவ்வாறு ஜீயர் சுவாமிகள் கூறினார்.

Advertisement