மலர் அலங்காரத்தில் வீதியுலா

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த பொம்மராஜபேட்டையில் அமைந்துள்ளது திரவுபதியம்மன் கோவில். இந்த கோவிலின் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், கடந்த வியாழக்கிழமை முதல் பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியுடன் தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது. தினசரி பகல் 2:00 மணிக்க, கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நிகழத்தப்படுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. கோவில் முன் மண்டபத்தில் நடந்த இந்த வைபவத்தில், பொம்மராஜபேட்டையை சேர்ந்தவர்களும், பொம்மராஜபேட்டையில்க இருந்து பெங்களூருவில் குடிபெயர்ந்துள்ளவர்களும் பங்கேற்றனர். மாலை 6:00 மணிக்கு தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினார். வரும் 18 ம் தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியும், 20ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
மேலும்
-
தமிழகத்தில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
பா.ம.க.,-தே.மு.தி.க.,வுடன் கூட்டணியா? முயற்சி செய்வோம் என நயினார் நாகேந்திரன் பதில்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடியை டிஸ்மிஸ் செய்யணும்: ஜீயர் சுவாமிகள்
-
கோவையில் 4 ஆட்டோ, 47 பைக் பறிமுதல்; திருடி பதுக்கி வைத்தது அம்பலம்!
-
ஹிந்து குறித்து அவதூறு பேசினால் தண்டனை; அமெரிக்காவில் முதன் முறையாக புது சட்டம்
-
ஜல்லிக்கட்டு காளை முட்டி பார்வையாளர் பரிதாப பலி