குடும்பத்துடன் தற்கொலை முயற்சி 9 வயது சிறுமி பலி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அண்ணாநகர் என்.எஸ்.கே., தெருவை சேர்ந்தவர் லிங்கம், 35; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் விஷாலினி, 9: சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். குழந்தையை வளர்ப்பதில் எதிர்காலத்தில் சிரமம் ஏற்படும் என்று நினைத்த, தம்பதி இருவரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு, மகளுக்கும் கொடுத்தனர்.

அதன் பிறகு, லிங்கம் தன் உறவினருக்கு விஷம் அருந்தியதாக தகவல் தெரிவித்தார்.

உறவினர்கள், மூவரையும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பலியானார். லிங்கம், அவரது மனைவி பானுமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காரைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement