ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு 4வது வெற்றி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானுக்கு எதிரான பிரீமியர் லீக் ஆட்டத்தில் சால்ட் மற்றும் கோலியின் சிறப்பான ஆட்டத்தால், பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு நினைத்ததை போல நடக்கவில்லை. சாம்சன் 15 ரன்னில் க்ருனல் பாண்டியா பந்தில் அவுட்டானார். தொடர்ந்து, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ரியான் பராக் ரன்களை சேர்த்தார். ரியான் பராக் 30 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் 35 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், 75 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் துருவ் ஜூரேல் 23 பந்துகளில் 35 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. புவனேஸ்வர் குமார், யாஷ் தயால், ஹசில்வுட், க்ருனல் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
174 ரன்களுடன் இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிரடியாக ஆடினர். இதனால், 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய பெங்களூரு அணி வீரர் சால்ட், 28 பந்துகளில் அரைசதம் அடித்தார், அவர் 33 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. தொடர்ந்து, கோலி, படிக்கல் விளையாடினர்.
45 பந்துகளில் கோலி அரைசதம் அடித்தார். இறுதியில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி 62 ரன்னுடனும், படிக்கல் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம், 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முத்திரை பதித்த கோலி
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி, டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்களை அடித்த முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும்
-
நின்ற லாரி மீது டூவீலர் மோதி இன்ஜினியர் பலி
-
சபரிமலையில் சித்திரை விஷு பூஜை
-
என்னை 'ஓட்டுன' மாதிரி அமைச்சர் மூர்த்தியை 'ஓட்டுங்க' செல்லுார் ராஜூ 'லகலக'
-
பொன்முடி பேச்சு குறித்து மீண்டும் கேட்பது பத்திரிகை தர்மம் அல்ல சபாநாயகர் அப்பாவு கோபம்
-
பாம்பனில் சிக்கிய கூரல் மீன் ஒரு மீன் ரூ.86 ஆயிரம்
-
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டு தீர்த்தவாரி