தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
திரைப்பட விநியோகதஸ்ராக வாழ்க்கையை தொடங்கியவர் ஜி. சேகரன். அதன் பின்னர் கலைப்புலி தாணுவுடன் இணைந்து கலைப்புலி பிலிம்ஸ் பங்குதாரர் ஆனார்.
1985ல் வெளியான த்ரில்லர் படமான யார் படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கினார். அந்த படத்தை தொடர்ந்து காவல் பூனைகள், உளவாளி ஆகிய படங்களையும் இயக்கி இருந்தார்.
இந் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜி. சேகரன்(73) இன்று (ஏப்.13)காலமானார். அவரின் மறைவை அறிந்த திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜி. சேகரன் உடல் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Bhaskaran - Chennai,இந்தியா
13 ஏப்,2025 - 22:40 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement