திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் தற்கொலை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே இளம்பெண் துாக்கிட்டு இறந்தது குறித்து விசாரணை நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், கோவுலாபுரத்தைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி, 29, சென்னை தனியார் கார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கவிதா, 25; திருவெண்ணெய்நல்லுாரில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஊழியர். இருவருக்கும் ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில், கவிதா, நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. எனினும், அவரின் தலை, நெற்றி போன்ற இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, கவிதாவின் உறவினர்கள் மருத்துவமனை முன், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து, கலைந்தனர்.

திருமணமாகி ஏழு மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தப்படுகிறது.

Advertisement