'புதிய தேசிய கல்விக்கொள்கை இளைஞர்களுக்கு நன்மை தரும்'

7

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லுாரி சார்பில், 'கொள்கை முடிவுகளால், இந்திய கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

இதில், சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:

நம் நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த, பல்வேறு கொள்கை முடிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. திறன்மிக்க இன்ஜினியர்களை, பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.

ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பவர்களாக மட்டும் இல்லாமல், கற்றுக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பாடத்திட்டங்கள், திறன் வளர்ப்பவையாகவும், நம் சமுதாயத்துக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், உதவுவதாகவும் இருக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் வெறும் லாப நோக்கம் கொண்டவையாக இல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை - 2020 ஆனது இந்திய இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருந்து நன்மை தரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை ஐ.ஐ.டி., இயந்திரவியல் துறை தலைவர் பாலாஜி, ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement