தேர்தலில் தி.மு.க., - த.வெ.க., இடையே போட்டி என்பது சிறந்த நகைச்சுவை!

5

சிவகாசி: வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,- த.வெ.க., இடையே போட்டி என்பது நகைச்சுவை என அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.



சிவகாசியில் அ.தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் தொட்ர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி என்பது மறைந்த ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட வெற்றிக் கூட்டணி. தி.மு.க., த.வெ.க/. இடையே போட்டி என்று விஜய் கூறுவது 2025ம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை.


நான்தான், நான்தான் என்று சொல்லக்கூடாது. அவர்கள் களத்திலேயே கிடையாது, எங்கேயும் கிடையாது. களத்தில் நிற்பது தி.மு.க., கூட்டணியா, அ.தி.மு.க., கூட்டணியா என்பதுதான். அ.தி.மு.க., கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரும். மாதாமாதம் வந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத திருப்பங்கள் இனி நிகழும்.


அ.தி.மு.க.,வை நம்பிய சிறுபான்மையினர் கெட்டதாக வரலாறே கிடையாது. அவர்களின் ஓட்டு உறுதியாக அ.தி.மு.க.,வுக்கு தான் வரும் என்று கூறினார்.

Advertisement