டென்னிஸ் ஆடுகளம் கட்டுமான பணி விரைந்து முடிக்க வீரர்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், 18 மீட்டர் அகலமும், 36 மீட்டர் நீளமும் கொண்ட சாலைபோட பயன்படுத்தப்படும் தார், சிமென்ட், பெயின்ட் கலவை வாயிலாக உருவாக்கப்பட்ட சின்தட்டிக் தரைதளத்துடன், இரண்டு டென்னிஸ் ஆடுகளம் அடுத்தடுத்து, ஒரே இடத்தில் உள்ளது.
இங்கு, காலை, மாலையில், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் டென்னிஸ் விளையாடி வந்தனர்.
மேலும், வட்டார, மாவட்ட, மாநில என, பல்வேறு அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி, கல்லுாரி மாணவ- -- மாணவியரும் இந்த ஆடுகளத்தில் டென்னிஸ் பயிற்சி பெற்று வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால், டென்னிஸ் ஆடுகளத்தின் 'சின்தட்டிக்' தரைப்பகுதியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, பெயர்ந்த நிலையில் இருந்தது.
இதனால், டென்னிஸ் விளையாடும் வீரர்கள், தடுமாறி தவறி விழுந்து காயமடைந்தனர்.
மேலும், சாதாரண மழைக்கே, டென்னிஸ் ஆடுகளத்தில் மழைநீர் தேங்குவதால், விளையாட்டு வீரர்கள் டென்னிஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, டென்னிஸ் ஆடுகளத்தை சீரமைக்க காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில், 29 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து புதிய டென்னிஸ் ஆடுகளத்தின் கட்டுமானப் பணிக்கு, கடந்த ஜன., 22ம் தேதி, தி.மு.க., -எம்.எல்.ஏ., எழிலரசன், அடிக்கல் நாட்டி, கட்டுமானப்பணியை துவக்கி வைத்தார்.
இதையடுத்து ஆடுகளத்தின் பழைய 'சின்தட்டிக்' தரை அகற்றப்பட்டு, ஜல்லிகற்கள் பரப்பி விடப்பட்டுள்ளன. கட்டுமானப் பணி துவக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பணி நிறைவு பெறாமல் உள்ளது.
இதனால், டென்னிஸ் வீரர்கள் விளையாட முடியாத சூழல் உள்ளது. எனவே, டென்னிஸ் ஆடுகளம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
-
வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!
-
என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க., கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்
-
தேர்தலில் தி.மு.க., - த.வெ.க., இடையே போட்டி என்பது சிறந்த நகைச்சுவை!
-
ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 பேர் பலி