அழுகிய நிலையில் ஆண் சடலம்

கண்டமங்கலம் : விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம் சர்வீஸ் சாலையிலில் இருந்து 75 மீட்டர் தொலைவில், காலி மனையில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடந்தது.
இதுகுறித்து கண்டமங்கலம் வி.ஏ.ஓ., அளித்த தகவலின் பேரில், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்த நபர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. யார் என்ற விபரம் தெரியவில்லை. நீல நிற கைலி மட்டும் அணிந்திருந்தார். வலது கையில் ஆர்.சிவகாமி என பச்சைக் குத்தப்பட்டிருந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிந்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
-
சால்ட் அதிரடி; இலக்கை நோக்கி முன்னேறும் பெங்களூரு
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்
Advertisement
Advertisement