விழுப்புரம், கடலுார், சிதம்பரம் வழியாக தாம்பரம்-போத்தனுார் சிறப்பு ரயில் இயக்கம்
கடலுார் : தமிழ் புத்தாண்டு கூட்ட நெரிசலை தவிர்க்க கடலுார், சிதம்பரம், மயிலாடுத்துறை வழியாக தாம்பரம்-போத்தனுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் கோடை கால கூட்ட நெரிசலைக் தவிர்க்க தாம்பரம்-போத்தனுார் இடையே வெள்ளிக்கிழமை வாராந்திர சிறப்பு ரயில் (06185) ஏப்., 11, 18, 25 மற்றும் மே 2 ஆகிய நாட்களிலும், மறு மார்க்கமாக போத்தனுார்-தாம்பரம் இடையே ஞாயிற்றுக் கிழமை வாராந்திர சிறப்பு ரயில் (06186) எப்ரல் 13, 20, 27 மற்றும் மே.., 4 ஆகிய நாட்களில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து வெள்ளிக் கிழமை மாலை 5:05 மணிக்குப் புறப்பட்டு, செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூா், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக போத்தனுாருக்கு சனிக்கிழமை காலை 7:15 மணிக்கு சென்றடைகிறது.
போத்தனுாரில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு 11:55 மணிக்குப் புறப்பட்டு அதே வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு திங்கள் கிழமை பிற்பகல் 12:15 மணிக்குச் செல்கிறது. சிறப்பு ரயிலில் ஒரு 'ஏசி' இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 'ஏசி' மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
-
சால்ட் அதிரடி; இலக்கை நோக்கி முன்னேறும் பெங்களூரு
-
இந்தியா உள்ளிட்ட 3 ஆசிய நாடுகளில் 1 மணி நேரத்தில் 4 நில நடுக்கம்; மக்கள் அச்சம்
-
தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி
-
நாட்டுக்கு சேவை செய்வதற்கான முதற்படி தேர்தலில் ஓட்டளிப்பதே: சொல்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்