5 அங்கன்வாடி பணியிடத்திற்கு ஏராளமானோர் விண்ணப்பம்
கடலாடி : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 84 அங்கன்வாடி பணியாளர்கள், 3 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 38 உதவியாளர்கள் பணியிடங்கள் என 125 பணியிடங்களில் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அந்த வகையில் கடலாடி தாலுகாவில் ஏ.பாடுவனேந்தல், இறைச்சிக்குளம், மறவாய்குடி, மேலச்சிறுபோது, சாயல்குடி ஆராய்ச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 பணியிடங்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் காலி பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது: கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 60 கிராம ஊராட்சிகளில் பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் 50க்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ள நிலையில் தற்போது 5 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளனர்.
இதனால் அதிகளவு போட்டி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் பணியிடங்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் உதவியாளர் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் சிரமத்தை சந்திக்கின்றனர் என்றனர்.
மேலும்
-
டில்லி பவுலிங்; தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை?
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு
-
உடனடியாக வெளியேறுங்கள்: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
-
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
-
வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி
-
ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு 4வது வெற்றி