கணவன் விபரீத முடிவு போலீசில் மனைவி புகார்

பவானி: சித்தோடு அருகே கங்காபுரம், அய்யப்பாலி, முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்

இந்து பிரியா. இவரின் கணவர் செந்-தில்குமார், 45; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். பேரூராட்சி இள-நிலை உதவியாளராக இந்துபிரியா பணிபுரிகிறார். செந்தில்குமா-ருக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் போதையில் வந்த கண-வரை, இந்துபிரியா கண்டித்து வந்தார். தற்போது பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் இந்து பிரியா பயிற்சி பெற்று வருகிறார். செந்தில்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். இந்நி-லையில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகா-ரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement