ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்; தெற்கு ரயில்வே புது அறிவிப்பு

4

சென்னை: ரயில்களில் கூடுதலாக லக்கேஜ்கள் எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


ரயிலில் பயணம் செய்யும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயிலில் ஏறும் போதும் லக்கேஜ்களையும் எடுத்து செல்வது வழக்கம். ரயில்களில் கூடுதலாக லக்கேஜ்கள் எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து சமூக வலைதளத்தில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

* 10 முதல் 15 கிலோ லக்கேஜ்களை கூடுதலாக கொண்டு செல்ல 1.5 மடங்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படும்.


* படுக்கை வசதி கொண்ட ரயிலில் பயணிப்போர் நபர் ஒன்றுக்கு 40 கிலோ லக்கேஜ்களை கொண்டு செல்லலாம்.



* ஏசி 2 டயரில் 50 கிலோவும், ஏசி முதல் வகுப்பில் பயணிப்போர் 70 கிலோ லக்கேஜ் எடுத்து செல்லாம்.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



ரயில்வே சில பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. வெடிபொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள், ரசாயன மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் பிடிபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். அதேபோல் அதிக லக்கேஜ் எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.

Advertisement