ஜெருசலேம் கல்லுாரி பட்டமளிப்பு விழா

சென்னை:சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லுாரியில், கடந்த 12ம் தேதி, 25, 26வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவுக்கு கல்லுாரி தலைவர் மாலா தலைமை ஏற்றார். விழாவில், அகிய இந்திய தொழில்நுட்ப கவுன்சிலர் தலைவர் டி.ஜி.சீதாராம், 639 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்; தரவரிசையில் முன்னிலை பெற்ற 53 மாணவர்களையும் கவுரவித்தார்.
விழாவில், சீதாராம் பேசுகையில்,''எதைச் செய்தாலும், ஆர்வத்துடனும் நேர்மையுடனும் செய்தால் வெற்றி கிடைக்கும். புதிய கல்விக்கொள்கையில், தொலைநோக்கு பார்வை உள்ளது. ஏ.ஐ., உள்ளிட்டவற்றில் மாணவர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என வாழ்த்தினார்.
கல்லுாரி முதல்வர் ரமேஷ், ஆண்டு சாதனைகளை விளக்கினார். விழாவில், ஜெருசலேம் கல்வி அறக்கட்டளை செயலர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
படவிளக்கம்: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் டி.ஜி.சீதாராம். அருகில், கல்லுாரி முதல்வர் ரமேஷ், கல்லுாரி தலைவர் மாலா மற்றும் நிர்வாகிகள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கேரளாவில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த பரிதாபம்
-
நேபாளம், திபெத்தில் திடீர் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
பெங்களூருவில் நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்த தண்ணீர் லாரி; பகீர் கிளப்பிய வீடியோ
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
Advertisement
Advertisement