கேரளாவில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த பரிதாபம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி அருகே வனத்தில், தேன் சேகரிக்க சென்ற இருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த சதீஷ் மற்றும் அம்பிகா என்பது தெரியவந்தது. இவர்கள் அதிரப்பள்ளியில் தற்காலிக குடிசைகளில் வசித்து வந்தனர்.

ஒரு நாள் முன்புதான், அதிரப்பள்ளியில் யானை தாக்கியதில் செபாஸ்டியன் (20) என்ற பழங்குடி இளைஞர் உயிரிழந்தார். அதே பகுதியில் காட்டு யானை தாக்கி இன்று (ஏப்ரல் 15) மேலும் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement