பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் காட்டம்

17


சென்னை: ''மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை. பிரிவினை வாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.

மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் வளாகத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,யும், தமிழக பா.ஜ., தலைவருமான நயினார் நாகேந்திரன் கூறியதாவது:



மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை. விருப்ப மொழியை தேர்வு செய்து படிக்கலாம். ஏனென்றால், தெலுங்கு, மலையாளம் பேசுவோரும் தமிழகத்தில் உள்ளனர்.பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,. நாடு வல்லரசு நாடாக வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லை.



அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறினார். தனித் தமிழ்நாடு வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர்; மாநிலங்கள் ஒன்றாக இணைந்தால் தான் நாடு வல்லரசாகும். மாநிலத்திற்கு தனியாக முழு அதிகாரம் கொடுக்க முடியாது. மாநில சுயாட்சி கோரிக்கையை ஏற்க முடியாது வெளிநடப்பு செய்துள்ளோம்.


தேர்தல் வரும் நேரத்தில் ஏதோவொரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். பெண்கள் குறித்து அவதூறாக பொன்முடி பேசி கொண்டு இருக்கிறார். இதனை மீடியாக்கள் பெரியதாக காட்டுவதாக தெரியவில்லை. மற்ற விஷயங்கள் ஏதாவது இருந்தால் அடிக்கடி பிரேக்கிங் செய்தி என திரும்ப திரும்ப போடுகிறார்கள்.


பொன்முடி பேசியது குறித்து அடிக்கடி போட வேண்டும். நம்ம எல்லோருக்கும் தாய் பெண். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

நச் பதில்




பா.ஜ., சட்டமன்ற தலைவர் மாற்றம் இருக்குமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''மாற்றம் இருந்தால் சந்தோஷம் தான். ஒரே ஆளே எல்லா பதவிகளையும் வைத்து கொண்டு இருந்தால் என்ன இருக்கிறது'' என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

Advertisement