ஐ.டி., ஊழியர்களை குறிவைத்து சைபர் குற்றங்கள் அதிகரிப்பு
சென்னை:தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் கிளெனீகல்ஸ் மருத்துவமனை இணைந்து, நேற்று, இ.சி.ஆர்., அக்கரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், 'தலைக்கவசம் இல்லாமல் பயணம் செய்யாதீர்' என்பதை வலியுறுத்தி பேரணி சென்றனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின்தினேஷ் மோடக் பேசியதாவது:
அதிகம் படித்தவர்களிடம் கூட, ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
ஐ.டி., நிறுவன ஊழியர்களை குறிவைத்து, அதிக அளவில் சைபர் குற்றங்கள் நடக்கின்றன. இதில், அவர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். சைபர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு பேசினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement