கால்பந்து: காலிறுதியில் ஜாம்ஷெட்பூர்

புவனேஸ்வர்: இந்தியாவில் ஐ.எஸ்.எல்., மற்றும் ஐ-லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது.
இதன் ஐந்தாவது சீசனில் 15 அணிகள் மோதுகின்றன. 'நாக் அவுட்' முறையிலான இந்த போட்டிகள் அனைத்தும் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கின்றன.
'ரவுண்டு-16' போட்டியில் ஜாம்ஷெட்பூர், ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் முதல் பாதியின் 39 வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜேவியர் சிவெரியோ கோல் அடிக்க, 1-0 என முன்னிலை பெற்றது.
போட்டியின் 64வது நிமிடத்தில் ஸ்டீபன் இஸ் ஒரு கோல் அடித்தார். முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இந்தியா - பாக்., போராக மாறக்கூடாது: எச்சரிக்கிறார் திருமாவளவன்
-
பெஞ்சல்' நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள்... பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
-
புரவலர் சேர்க்கை
-
கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா விழிப்புணர்வு
-
கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்
Advertisement
Advertisement