அரையிறுதியில் வைஷ்ணவி

அன்டல்யா: துருக்கியில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, பெல்ஜியத்தின் அமேலி வான் இம்பே மோதினர்.


இதில் வைஷ்ணவி 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, அமெரிக்காவின் இண்டியா ஹவுட்டன் ஜோடி, பெல்ஜியத்தின் அமேலி வான் இம்பே, காட் கோபஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் வைஷ்ணவி ஜோடி 5-7, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

Advertisement