சிறந்த வீரர் ஷ்ரேயஸ் * ஐ.சி.சி., விருது

துபாய்: ஐ.சி.சி., மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்தியாவின் ஷ்ரேயஸ் தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. மார்ச் மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் ஷ்ரேயஸ், நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா, ஜேக்கப் டபி என மூன்று வீரர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் ஷ்ரேயஸ் 30, சிறந்த வீரராக தேர்வானார்.
கடந்த பிப்ரவரி மாத சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வானார். தற்போது தொடர்ந்து இரண்டாவது மாதம், சிறந்த வீரராக இந்தியர் தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 3 போட்டியில் (மார்ச்) ஷ்ரேயஸ், 172 ரன் (சராசரி 57.33) எடுத்து இருந்தார்.
ஷ்ரேயஸ் கூறுகையில்,' சர்வதேச அரங்கில் முக்கிய தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவு. இவ்விஷயத்தில் எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. தற்போது மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக தேர்வானது, உண்மையில் பெருமையாக உள்ளது. இந்த அங்கீகாரம் வியக்கத்தக்கது, ஸ்பெஷலானது,'' என்றார்.
மேலும்
-
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை
-
காஞ்சியில் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்
-
ஹோலி கொண்டாட ரூ.1.22 லட்சம் செலவு: அரசு பணத்தில் தலைமை செயலர் 'தாம் துாம்'
-
'ஸ்பா'வில் பணம், நகை பறிப்பு 'போலி' போலீசார் அட்டகாசம்
-
5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட லாரியில் சிக்கிய வாலிபர் உடல்
-
சத்தீஸ்கரில் 11 பெண்கள் உட்பட 33 நக்சல்கள் போலீசில் சரண்