ரசிகர்கள் மீது பட்டாசு வீச்சு * பெங்களூரு கால்பந்து அணி புகார்

பெங்களூரு: ஐ.எஸ்.எல்., பைனலின் போது பெங்களூரு ரசிகர்கள், உரிமையாளர்கள் மீது பட்டாசு வீசப்பட்டது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 11வது சீசன் சமீபத்தில் நடந்தது. கோல்கட்டாவில் நடந்த பைனலில் பெங்களூரு, மோகன் பகான் அணிகள் மோதின. இதில் மோகன் பகான் அணி 2-1 என வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.
அப்போது போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பெங்களூரு ரசிகர்கள், சக பணியாளர்கள், உரிமையாளர்கள் மீது மோகன் பகான் ரசிகர்கள் சிலர் பட்டாசை வீசியுள்ளனர். இதில் பெங்களூரு அணி உரிமையாளர் பார்த் ஜிண்டாலுக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு அணி வெளியிட்ட செய்தியில்,' பைனலில் போது, உள்ளூர் ரசிகர்கள் சிலர் எங்களது ரசிகர்கள் மீது பட்டாசு வீசியதை வன்மையாக கண்டிக்கிறோம். சிலருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை தரப்பட்டுள்ளது. உரிமையாளருக்கும் காயம் ஏற்பட்டது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, ஐ.எஸ்.எல்., கால்பந்து நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நடவடிக்கை எடுத்து ரசிகர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,' என தெரிவித்துள்ளது.
மேலும்
-
மாணவரை கடத்தி நகை, பணம் கேட்டு மிரட்டல் ஆட்டோ டிரைவர் உட்பட நால்வர் கைது
-
தேனாம்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
-
தடுப்பு இல்லாத மலைப்பட்டு குளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
-
கால்வாயில் மண் கொள்ளை 5 பேர் கைது
-
உள்ளூரு... தேறாத பெங்களூரு * பஞ்சாப் அசத்தல் வெற்றி
-
மாயமான சிறுமி 2 ஆண்டுக்கு பின் கடலுாரில் மீட்பு