சாஹல் சிறப்பான பந்துவீச்சு: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி

சண்டிகர்: கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் தொடரின் 31வது போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணியும் கோல்கட்டா அணியும் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடினர். இதில் ப்ரியான்ஸ் ஆர்யா 22 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களும் எடுத்து ஹர்சித் ராணா பந்தில் ஆட்டமிழந்தனர்.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்சித் ராணா பந்தில் அவுட் ஆனார்.
மேக்ஸ்வல் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வருண் பந்தில் அவுட் ஆனார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.
கோல்கட்டா அணியின் மிரட்டலான பந்துவீச்சில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பஞ்சாப் அணியின் மோசமான பேட்டிங்கால் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
112 ரன்கள் வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய கோல்கட்டா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டி காக் 2ரன்களில் பர்ட்லெட் பந்தில் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 5 ரன்களுக்கு ஜான்சன் பந்துவீச்சில் போல்டானார்.
கோல்கட்டா அணி கேப்டன் ரஹானேவும் ரகுவன்ஷியும் ஒரளவு நிலைத்து ஆடினர்.
இந்நிலையில் ரஹானே 17 ரன்களில் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ரகுவன்ஷி அதிகபட்சமாக 37 ரன்களில் சஹால் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
வெங்கடேஸ், ரிங்கு சிங் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
சஹால் சுழல்: சஹால் சுழலில் ரஹானே,ரகுவன்ஷி,ரிங்கு ராமன்தீப் சிங் ஆகிய நான்கு பேர் வீழ்ந்தனர்.
அடுத்து வந்தவர்களும் விரைவாக அவுட் ஆகி வெளியேறினர். இந்நிலையில் கோல்கட்டா அணி, 15.1 ஓவரில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்நிலையில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீட்டில் கஞ்சா செடி : மத்திய அரசு அதிகாரி கைது
-
பழநி கிரிவீதியில் கண்காணிப்பு குழு ஆய்வு
-
பைக்கில் வந்து நகை பறித்த லாரி உரிமையாளர் கைது
-
கார்--லாரி மோதல்: 3 பேர் பலி
-
ரஷ்யா - -உக்ரைன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு
-
மஞ்சள்நீர் கால்வாய் ஓரம் கழிவுநீர் பள்ளம் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம்
Advertisement
Advertisement