பிக்கப் வாகனம் மரத்தில் மோதிபெண் பலி; 5 பேர் படுகாயம்


பிக்கப் வாகனம் மரத்தில் மோதிபெண் பலி; 5 பேர் படுகாயம்


தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு, கோட்டூர் கிராமத்தில் இருந்து தர்ப்பூசணி லோடு ஏற்றிய பிக்கம் வாகனம், நேற்று மாலை சென்றது. அஞ்செட்டி அடுத்த நாட்றாம்பாளையம் அருகே கேரட்டியை சேர்ந்த மாதையன், 46, என்பவர் வாகனத்தை ஓட்டினார். அதே பகுதியை சேர்ந்த மஞ்சு மனைவி கவிதா, 33, மணி மனைவி ராதா, 35, முனுசாமி மனைவி ரத்னா, 35, அர்ஜூனன் மனைவி பழனியம்மாள், 40, மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் வாகனத்தில் பயணம் செய்தனர்.
தாவரக்கரை அடுத்த கரகூர் கிராமம் அருகே மாலை, 6:00 மணிக்கு சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதில், பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் மாதையன் உட்பட, 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement