பத்தாம் வகுப்பு தேர்வு நிறைவுமாணவர்கள் துள்ளிக்குதித்து உற்சாகம்


பத்தாம் வகுப்பு தேர்வு நிறைவுமாணவர்கள் துள்ளிக்குதித்து உற்சாகம்


நாமக்கல்:தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த, 28ல் தொடங்கியது. இத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த, 10,016 மாணவ, மாணவியர், 220 தனித்தேர்வர் என, மொத்தம், 19,236 பேர் தேர்வெழுதினர். இதற்காக, மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மொத்தம், 92 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில், 94 முதன்மை கண்காணிப்பாளர், 2 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர், 2 கூடுதல் துறை அலுவலர்கள், 170 பறக்கும்படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள், 24, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 3 மற்றும் அறை கண்காணிப்பாளர்கள், 1,690 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவியர், தங்களது மொபைல் போனில், 'செல்பி' எடுத்துக் கொண்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவியும், துள்ளிக்குதித்தும் உற்சாகமடைந்தனர்.

Advertisement