சித்திரை முதல் நாள் இரவில் கோயில் திருவிழா தேதி முடிவு

ஆர்.எஸ்.மங்கலம் : சாத்தனுார் சாத்தையனார் கோயில் எருது கட்டு விழா தேதியை சித்திரை முதல் நாள் இரவில் கிராமத்தார்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுாரில் பிரசித்தி பெற்ற மகா சாத்தையனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் விழா ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக நடக்கிறது. இந்நிலையில் தமிழ்ப்புத்தாண்டான சித்திரை மாதம் துவங்கியதை தொடர்ந்து சித்திரை எருதுகட்டு விழா தேதியை நிர்ணயம் செய்வதற்காக கிராமத்தார்கள் மற்றும் சுற்றுப்புற பகுதி பக்தர்கள் ஒன்று கூடி விழா தேதியை முடிவு செய்தனர்.

முன்னதாக, சிவாச்சாரியார்கள் தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் குறித்தும், ராசி பலன்கள் குறித்தும் விளக்கினர். தொடர்ந்து ஏப்.30ல் விழா காப்பு கட்டுதலுடன் துவங்கி மே 7 ல் விழா நடத்த தேதி குறிக்கப்பட்டது. முன்னதாக மூலவருக்கு நடைபெற்ற தீப ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement