சேதமான ரோடுகளால் பரிதவிக்கும் சித்துவார்பட்டி மக்கள்

வடமதுரை : சித்துவார்பட்டி ஊராட்சி பகுதியில் ரோடுகள், குடிநீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஊத்துபட்டி, நொச்சிகுளத்துபட்டி, புதுசித்துவார்பட்டி, மலைக்கோட்டை, நாகன்களத்துார், எஸ்.கே.நகர், கே.வி.எஸ்.,நகர், ரெங்கநாதபுரம், கெண்டமுத்துநாயக்கனுார், சீரங்ககவுண்டனுார், வடுகபட்டி, பாண்டியனுார், தோப்புபட்டி, பாலக்குறிச்சி, பழைய சித்துவார்பட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களை கொண்டஇந்த ஊராட்சியில் குறிப்பாக நொச்சிகுளத்துபட்டி,- பழைய சித்துவார்பட்டி, ரெங்கநாதபுரம், பாண்டியனுார், கருப்பாறை களம், கெண்டமுத்துநாயக்கனுார் கிராமங்களை இணைக்கும் ரோடுகள் சேதமடைந்துள்ளதால் இப்பகுதியினர் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர். வடுகப்பட்டி, நொச்சிகுளத்துபட்டி, பாலக்குறிச்சி என பல இடங்களில் சுகாதார வளாகங்கள் பயனற்று கிடக்கின்றன. வடுகபட்டி பாண்டியனுார் ரோட்டில் குறுக்கிடும் ஓடையில் இருக்கும் தரைப்பாலத்திற்கு பதிலாக உயர்மட்டத்தில் கண் பாலம் அமைக்க வேண்டும்.
தேவை மினி பஸ்
வி.எஸ்.கனகசுந்தரம், வியாபாரி, சித்துவார்பட்டி: நீண்ட கால கோரிக்கையான பழைய சித்துவார்பட்டி வரட்டாற்றில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. சித்துவார்பட்டியில் சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். அண்ணாநகர் பகுதியில் இருந்து பழைய சித்துவார்பட்டி வரை வரட்டாற்று பாதை சிதைந்து சீரற்று கிடக்கிறது. இப்பகுதியில் ஆற்றை துார்வாரி கரையை பலமாக்க வேண்டும். பாலக்குறிச்சி, வடுகபட்டியை இணைத்து மீண்டும் மினி பஸ் சேவை இயக்க வேண்டும்.
- மண் ரோடால் அவதி
எம்.வாசுதேவன், அ.தி.மு.க., கிளை செயலாளர், வடுகப்பட்டி: வடுகப்பட்டியில் சீரங்ககவுண்டனுார் ரோடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தற்போது மில், பள்ளி வேன்கள் அதிகளவில் கிராமங்களுக்கே வந்து செல்வதால் கூடுதல் அகலத்துடன் ரோடு அமைக்க வேண்டும். வரட்டாற்றினால் ஊராட்சியின் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட பகுதியாக இருப்பது கெண்டமுத்துநாயக்கனுார். இங்கு செல்வதற்கு அய்யலுார் பேரூராட்சி கருவார்பட்டி வழியே தான் செல்ல வேண்டும். இங்குள்ள மண் ரோட்டை தார் ரோடாக்க வேண்டும்.
-ரோட்ரோத்தில் முட்புதர்கள்
பி.பாலகிருஷ்ணன், விவசாயி, பாண்டியனுார்: அய்யலுார் ரோட்டில் வேங்கனுார் பிரிவு துவங்கி செம்மடை வரை ரோடு புதுப்பித்தல் பணி நடக்காமல் விடுபட்டுளளது. வடுகபட்டி பாண்டியனுார் ரோட்டில் கடைசி பகுதியிலும், சீரங்ககவுண்டனுார் ரெங்கநாதபுரம் ரோடும் புதுப்பித்தல் பணியில் தற்போது விடுபட்டுள்ளது. இதையும் விரைவில் சீரமைக்க வேண்டும். இங்குள்ள சில ரோடுகளில் இருபுறமும் முட்புதர்கள் அதிகம் வளர்ந்துள்ளதால் அவ்வழியே செல்வோர் சிரமப்படுகின்றனர். 100 நாள் திட்ட பணியில் முட்புதர்களை அகற்றுவதற்கு முன்னுரிமை தர வேண்டும்.
மேலும்
-
சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்கு உ.பி., போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்
-
காங்., அரசை கவிழ்க்க மத்திய அரசு... சதி? சித்து, சிவகுமாருக்கு கார்கே எச்சரிக்கை
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்