தமிழ் வருட முதல் செவ்வாய் கந்தசுவாமி கோவிலில் தரிசனம்

திருப்போரூர்:திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், அன்று கந்த பெருமானை தரிசிக்க, ஏராளமானோர் திருப்போரூரில் திரள்கின்றனர்.
அந்த வகையில், நேற்று செவ்வாய்க்கிழமை என்பதாலும், தமிழ் புத்தாண்டின் முதல் செவ்வாய் என்பதாலும், காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர்.
பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
மொட்டை அடித்தல், துலாபாரம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். குறிப்பாக, பெண்கள் வட்ட மண்டபத்தை சுற்றி அமர்ந்து விளக்கேற்றி, கூட்டு வழிபாடு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்
-
தொழிலாளி மர்ம சாவு
-
மேல்மலையனுார் கோவிலில் ரூ.73 லட்சம் காணிக்கை வசூல்
-
தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
-
அரசு பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணமாக ரூ.20 வசூலிக்க உத்தரவு பிரின்டர், பேப்பர் வசதி இருந்தும் 'கமிஷனுக்கான' நடவடிக்கையா
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: நைஜீரியாவில் 51 பேர் பலி
Advertisement
Advertisement