தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

10

சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நாளை(ஏப்.,17) மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், பல்கலைகளுக்கான துணை வேந்தர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.


தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய, பல்கலை துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான, 10 மசோதாக்களுக்கு, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இவ்விஷயத்தில் கவர்னருக்கான அதிகாரத்தையும் மாநில அரசுக்கு மாற்றி உள்ளது.


இதையடுத்து, அனைத்து பல்கலை துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று மாலை முதல்வர் தலைமையில் நடக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, நாளை அமைச்சரவை கூடுகிறது.

Advertisement