கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்

புதுச்சேரி : உருளையான்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா சங்கோதி அம்மன் கோவில் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்பகுதி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில தொண்டர் அணி துணை தலைவர் மதனா, வர்த்தகர் அணி துணை தலைவர் சண்முகசுந்தரம், இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மராஜ், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஸ்ரீதர், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஸ்டிபன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அர்ஜுன் ரங்கராஜ், கிளை செயலாளர்கள் இளங்கோ, கருணாகரன், அகிலன், பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை செல்வம், தெய்வாதீனன், பாக்யராஜ், அமிர்தலிங்கம் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement